Recent Comments

    அல்பினோ: கறுப்பிலிருந்து வெள்ளைவரை …

    Thayagamweb-featuredalbinoக.கலாமோகன்

    ஆபிரிக்காவின் மாலி தேசத்தினது மிகச் சிறந்த பாடகன் Salif Keita. இந்தப் பாடகன் உலகின் சிறப்பான பாடகர் எனவும் கருதப்படுகின்றார் . நீண்ட காலமாக நான் இவரது பாடல்களை ரசித்து வருகின்றேன். இவரது சிறப்பான பாடல்களில் ஒன்றாகக் கணிப்பிடப்படுகின்றது Folon . மிகவும் சிறப்பான பாடகரான இவர் albino, ஆம் நிறைய வெள்ளைத் தோலோடு பிறந்திருக்கும் ஆபிரிக்கன். ஆனால் இவர்கள் நிச்சயமாக வெள்ளையர்களாகக் கருதப்படுவதில்லை.

    இந்த “ஆபிரிக்க வெள்ளையர்கள்” சமூகக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சில ஆபிரிக்க நாடுகளில் albino க்களைப் பிடித்து உயிர்ப்பலி செய்வதும் நடத்தப்படுகின்றது. சில கறுப்புக் குடும்பத்துள் albino பிறந்தால், தமது குடும்பத்துக்குக் கேடு வரும் என நினைத்து பெற்றோரே குழந்தைகளைக் கொல்லுவதும் உண்டு. இவர்களை “பேய்கள்” “பிசாசுகள்” எனக் கருதும் மடமைப் போக்கு இன்றும் சில சமூகப் பிவுகளில் உள்ளன. கடந்த வருடத்தில் மேற்கு ஆபிரிக்காவில் 43 அல்பிநோக்கள் கொல்லப்படனர் எனச் செய்திகள் சொல்கின்றன.

    அல்பிநோக்களை அசுத்தமான பிறவிகள் எனும் பிரிவு இவர்களைக் கொடுமைப் படுத்துகின்றது. இவைகளை ரகசியமான வாழ்வுக்குத் தள்ளுகின்றது. ஆனால் இவர்களை விரும்புவது சூனியர்களே. இவர்களின் கைகைளில் ஓர் அல்பினோ கிடைத்தால் அவர் பலியாகுவார். அவரது உடலின் பகுதிகள் பலிக்காக வெட்டப்படும். இந்த சூனியர்கள் அல்பினோக்களின் எதிரிகளே.

    தான்சானியாவில் அல்பினோக்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கின்றதன . ஆனால் இந்த அரசு இந்த வன்முறைகலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கின்றது.

    கறுவல் வெள்ளையாகுவது அசாதாரணம். இது பிறப்பினால் நிகழ்வதே. ஆனால் கறுவல் வெள்ளையாகுவதையும், வெள்ளை கருப்பு ஆகுவதையும் சில மனிதப் பிரிவுகள் குற்றமானதாகக் கருதும் அசாதாணமும் இருக்கின்றது. நிறங்கள் எப்படியும் இருக்கலாம், நாம் மனிதர்களே எனும் புத்தியின்மை இன்றும் உலகத்தில் உள்ளது.

    salif keitaSalif keita தான் பாடகன் என்ற பெருமையால், அல்பினோக்களின் கொடுமைக்கு எதிரான அமைப்பொன்றைத் தொடக்கியுள்ளார். கொங்கோ தேசத்தின் Thierry Moungalla ஒரு அல்பினோ. இவர் தபால், செய்தித்தள அமைச்சராக இருக்கின்றார்.

    தன்சானியாவில் உள்ள Josephat Torner பல வருடங்களாக நிறைய அல்பினோ குழந்தைகளின் கொலைகளுக்கு எதிராகவும், அவர்களது பாதுகாப்புக்காகவும் போராடி வருகின்றார். “நாங்கள் மனிதர்களே. இந்த உண்மையைச் சொல்ல எமக்குக் கல்வி அவசியம்.” என அவர் சொல்கின்றார். Josephat Torner

    பல ஆபிரிக்க நாடுகளில் அல்பினோ பாதுகாப்புக்கான அமைப்புகள் இப்போது தொடங்குகின்றன. இது சூனியர்களை விரட்டும் என நம்பலாம்.

     

    Postad



    You must be logged in to post a comment Login