தேனே, உன்னைத் தேடித் தேடி நான் அலைந்தேனே!
நீண்ட நாட்களுக்கு முன் வாங்கிய தேன் கட்டியாகி, சீனித் துகள்களாய் காட்சியளித்தால், தேன் பழுதாகி, பூஞ்சணம் பிடித்து விட்டது என்று நினைத்து என்று பலரும் எறிகிறார்கள்;. ஆனால் உண்மையில் கட்டித் தேன் தான் தரமானது.
தேனில் உள்ள குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகிய இனிப்புகளின் செறிவு மிகவும் அதிகமாயிருப்பதால் அதில் குளுக்கோஸ் சீனித் துகள்களாக மாறுவது இயற்கையே. கூட்டில் இருக்கும்போதே தேன் கட்டியாகலாம்.
தேன் கட்டியாவதற்கு மூன்று காரணங்கள். வெப்பநிலை, பூக்களின் மகரந்தம், இரண்டு இனிப்புகளுக்குமான விகிதம்.
வெப்பநிலை பத்துச் சதம பாகைக்குக் குறைய தேன் கட்டியாகும். எனவே குளிர்சாதனப் பெட்டியில், குளிரான சமையலறை அலுமாரியில் வைக்காதீர்.
கட்டியான தேனை களியான தேனாக்க, அதைச் சூடாக்க வேண்டும். மைக்ரோவேவில் வைத்தால் அது சரியான அளவில் சமனாகச் சூடாகாது. எனவே, சூடான தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் தேன் போத்தலை வைத்தால் அது திரவமாகும்.
ஆனால் சூடாக்கிய தேன் மீண்டும் கட்டியாகும். அடிக்கடி சூடாக்கி, குளிர்ந்து கட்டியாக, தேன் அதன் சுவையை இழந்து விடுவதால், தேவையான அளவை மட்டும் எடுத்து சூடாக்கிப் பயன்படுத்தலாம்.
தேனை பிளாஸ்டிக் போத்தல்களில் வைப்பதை விட, கண்ணாடிப் போத்தல்களில் வைப்பது சூடாக்க உதவும். தேனில் உள்ள இரண்டு இனிப்புகளின் விகிதம், பூவுக்கு பூ வித்தியாசமானது. இதனால், ஒவ்வொரு வகைத் தேனும் கட்டியாவது வித்தியாசமாயிருக்கும்.
தேனீக்கள் தேனைச் சேர்க்கும்போது பூவில் உள்ள மகரந்தங்களும் ஒட்டி வந்து தேன் கூட்டில் நிறைகின்றன. மகரந்தத் துகள்கள் கட்டியாவதை ஊக்குவிக்கும். இயற்கையாய் சேகரிக்கும் தேனில் அதிகளவில் மகரந்தம் இருக்கும்.
கடையில் விற்கும் தேன் பார்ப்பதற்கு கவர்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மகரந்தங்களை வடித்து எடுக்கிறார்கள். இதனால், தௌpந்த தேன் கட்டியாவது குறையும். அத்துடன் நீண்ட தூரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பலாம். சீனத் தேன் இங்கே கிடைப்பது இதனால் தான்.
கடையில் விற்கும் தேன் தௌpந்து அழகாய் இருந்தாலும், அவை பலவகைத் தேன்களின் கலவையே. விவசாயிகள் சந்தைகளில் விற்கும் தேனை வாங்குவது நல்லது. அவை கட்டியானாலும், வௌ;வேறு வகையான பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும்.
எனவே எதிரிலிருக்கும் தேனைத் தொடப் பயப்படாமல், அங்கம் குளிர வாரியணைத்து அகமகிழுங்கள்.
You must be logged in to post a comment Login