சிறுவனாக இருந்தபோது கிணறுகளின் அழகைத் தியானிப்பதற்கு நிறைய தினங்களைச் செலவளித்தேன். ஒவ்வொரு கிணறும் ஒவ்வொரு கதைகளாகப் பட்டதுண்டு. ஒவ்வொரு கிணறும் ஒரு மாதிரி இருக்காது. அவைகளது வடிவங்களிலும் ஆழங்களிலும் மாற்றம் இருக்கும். ஒவ்வொரு கிணற்றின் தண்ணீரும் ஒரு சுவையைக் காட்டியதில்லை. சில கிணறுகளில் மீன்கள் வசிப்பதுண்டு. தண்ணீரின் செழுமைக்கு அத்தாட்சி செய்பவைகள் கிணறுகள். இலங்கையின் எனது சில சிறிய பயணங்களில் கிணறுகளைத் தேடினேன். ஆம்! தண்ணீரின் அழகைக் காணவும், சுவையைத் தேடியும்.
தண்ணீர் மனித வாழ்வின் மூலம். பல அமைப்புகள் இது இலவச நுகர்வாக இருக்கவேண்டும் எனப் போராடி வருகின்றன. சில நாடுகளில் தண்ணீர் பொன்னைக் காட்டிலும் பெரிதாக மதிக்கப்படுகின்றது. தண்ணீர் இல்லாமல் நாம் அசைய முடியாது. ஆனால், தண்ணீர் உலகின் மிகப் பெரிய வியாபாரமாகவும், விற்பவர்கள் கோடீஸ்வரர்களாக வருவதையும் இந்த யுகத்தில் காணலாம்.
தண்ணீரின் முழுமையை அறிய தண்ணீர் இல்லாத நாடுகளுக்குச் செல்ல வேண்டும். ஆபிரிக்காவின் மாலி தேசத்துக்கு நான் பல தடவைகள் சென்றதுண்டு. இந்த தேசத்தில் தண்ணீர் வளம் மிகக் குறைவு. கிணறுகள் கொஞ்சம் தண்ணீர்த் தேவைகளைத் தீர்க்கும். unisef இன் குறிப்பின்படி, இந்த நாட்டின் 50 வீத மக்கள் குடிக்கும் தண்ணீரைப் பெறுவதற்கு சிரமப்படுகின்றனர். நிறையச் சிறுவர்கள் diarrhea வால் இறக்கும் நிலை இங்கு உள்ளது. பல ஆபிரிக்க நாடுகளில் தண்ணீர் பெற பல மணி நேரங்களைச் செலவழிக்கவும் வேண்டும்.
தண்ணீர் விற்பனை உலகின் பெரிய வியாபாரமாக வந்துள்ளது. Nestlé நிறுவனம் இன்று உலகின் தண்ணீரைக் களவாடும் நிறுவனமாக இருக்கின்றது. பல அமைப்புகள் தண்ணீர் வியாபாரமாக இருக்கக் கூடாது என்று சொல்லும் வேளையில், தாகத்தைத் தீர்க்க பணம் கொடுக்கவேண்டிய நிலை தொடர்கின்றது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் நல்ல தண்ணீர் குடிப்பதற்கு கஷ்டப்படுகின்றனர் எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Coca-Cola நிறுவனம் இந்தியாவில் தண்ணீரை மிகவும் களவாடியது, அது தண்ணீர் எடுத்த இடத்தில் வாழும் மக்களை ஏழைகள் ஆக்கியது. Coca-Cola விற்பனையால் நிறைய மக்கள் தண்ணீர் குடிக்க அவதிப்பட்டனர். ஓர் கிளாஸ் coca தயாரிக்க 2 கிளாஸ் தண்ணீர் தேவை என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். பல ஆர்ப்பாட்டங்களால் இந்தியாவில் ஒரு coca cola நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
மனித உயிர்ப்பின் முதலாவது தேவையாக உள்ள தண்ணீரைத் திருடும் முதலாளித்துவ நாடுகளினது தொழிற்சாலைகளின் போக்கு வெறுக்கத்தக்கது, நீக்கப்படவேண்டியது.
You must be logged in to post a comment Login