Recent Comments

    இணையத்திற்கு அகவை இருபத்தி ஐந்து!

    1989, மார்ச் 12ம் திகதி சுவிட்சலாந்தில் உள்ள ஐரோப்பிய அணு ஆய்வு அமையத்தின் ஆய்வு கூடத்தில், உலகளாவிய கணனி வலையமைப்பைப் பயன்படுத்தி கணனிகள் ஊடாக எப்படி தகவல் பரிமாற்றம் செய்வது என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்றை ரிம் பேர்ணர்ஸ் லீ சமர்ப்பித்தார்.  உலகம் முழுவதும் உள்ள கணனிகள்; இணைந்த ஒரு வலைப்பின்னலாய், படங்கள், ஒலிகள், வீடியோக்கள் என்பவற்றை உலகில் எவரும் பார்ப்பதற்கு வழி வகுத்தது இந்தக் கண்டுபிடிப்புத் தான். உண்மையில் இணையத்தின் ரிஷி மூலம் அமெரிக்க பல்கலைக் கழகங்கள், ஆய்வு மையங்கள், இராணுவம் என்பன தங்களுக்குள் கணனி மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதற்கானதே. ஆனால் இந்த தகவல் பரிமாற்றங்கள் வெறும் எழுத்துக்களாலேயே நடைபெற்றன. கணனித் திரையில் எழுத்து வரிகளாக அமைந்த இந்த இணையத்தை படங்கள், ஒலிகள், வீடியோக்கள் என இலகுவில் பார்க்க வைத்தது இந்த ஆய்வுக் கட்டுரையில் முன்வைத்த கருத்துக்களே. இதன் அடிப்படையில் எழுதப்பட்ட மொசாய்க் என்ற முதல் உலாவி தான் இணையத் தொடர்பை இலகுவாக்கியது. பொதுமக்களின் பாவனைக்குத் திறந்த பின்னால், தற்போது இணையம் கூகிள் குறோம், நெற்ஸ்கேப் நவிகேட்டர், பையர்பொக்ஸ், சபாரி போன்ற பிரபல உலாவிகளின் உதவியுடன் உலவப்படுகிறது. ஹப்பி பேர்த் டே இணையம்!   முதன் முதல் இணையத்தில் படம் பார்க்கக் கிடைத்த வசதியைப் பயன்படுத்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக, கணனி ஆய்வு கூட விஞ்ஞானிகள் செய்த முதல் வேலைகளில் ஒன்று... அவர்களின் ஆய்வுகூடத்தில் உள்ள கோப்பி இயந்திரத்தில் கோப்பி இருக்கிறதா என்பதை தங்கள் கணனிமூலம் பார்க்க வசதியாக, அருகில் உள்ள கமெராவிற்கு இணைய இணைப்புக் கொடுத்தது தான்.

    Postad



    You must be logged in to post a comment Login